சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: போன், பேக்ஸ் மூலம் புகார் தெரிவிக்கலாம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் முறைகேடுகள் குறித்து போன், பேக்ஸ் மூலம் தேர்தல் பார்வையாளர்களிடம் புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. சங்கரன்கோவில் தொகுதிக்கு பொது தேர்தல் பார்வையாளராக உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மறு சீரமைப்பு கமிஷனர் ரமேஷ் குமார் சதான் சூ, போலீஸ் பார்வையாளராக பரோடா டி.ஐ.ஜி. விஜயராஜ்சிங் கவுதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சங்கரன்கோவில் தொகுதியில் தேர்தல் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அந்த கூட்டத்தில் கலெக்டர் செல்வராஜ், டி.ஆர்.ஓ. உமா மகேஸ்வரி, எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்திரசேகரன், மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் விஜயகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் ராமச்சந்திரன், பி.ஆர்.ஓ. மதிமாறன், ஏ.பி.ஆர்.ஓ. நவாஸ் கான், தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் பார்வையாளர்கள் இருவரும்ம் வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகை கட்டடத்தில் அறை எண் 1 மற்றும் 2ல் தங்கியுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் மற்றும் புகார்கள் குறித்து பொதுமக்கள் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை தேர்தல் பார்வையாளர்களை சந்திக்கலாம்.
தேர்தல் பார்வையாளர் ரமேஷ்குமார் சுதான்சூவை 94890 51192, பேக்ஸ் - 2500198, விஜய்ராஜ் சிங் கவுதமை 94890 51193, பேக்ஸ் - 2501169 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications