அசாம் கோயிலில் நரபலியா?: துண்டிக்கப்பட்ட மனித தலையால் பரபரப்பு
கவுகாத்தி: அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள புகழ்பெற்ற காம்க்யா கோயிலில் மனித தலை ஒன்று கிடந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேண்டியது நிறைவேறுவதற்காக நரபலி கொடுக்கப்பட்ட தலையா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுகாத்தி காமாக்யா கோயில் இந்தியா முழுவதும் புகழ்பெற்றது. இக்கோயில் இன்று பிளாஸ்டிக் பை ஒன்றில் மனித தலையும் சுலோகங்கள் எழுதப்பட்ட காகிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது பகதர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் பிளாஸ்டிக் பையில் ரத்த சிதறல்கள் இல்லாததால் வேறு ஏதோ ஒரு இடத்தில் தலையை துண்டித்து இங்கே கோயிலில் போட்டிருக்கலாம் என்கின்றனர் போலீசார்.
இருப்பினும் நரபலி கொடுப்பதற்காக வைக்கப்பட்டதா? என்பது குறித்து இப்போதைக்கு கருத்து சொல்ல முடியாது என்றும் அசாம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2003-ம் ஆண்டு இதே காமாக்யா கோயிலில் பாதுகாவலர் ஒருவர் ஒன்றரை வயது குழந்தையை நரபலி கொடுக்க முயன்றதை போலீஸார் தடுத்திருந்தனர்.
நரபலி நடைமுறை
அசாமில் 18-ம் நூற்றாண்டு வரை நரபலி கொடுக்கும் வழக்கம் பரவலாக பல்வேறு கோயில்களில் நடைமுறையில் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அசாமின் அண்டை மாநிலமான நாகலாந்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயங் எனும் நாகா இனக் குழுவினர் மனித தலைகளை வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். எத்தனை மனித தலைகளை ஒருவன் வெட்டுகிறானோ அவனே மிகச்சிறந்த வீரனாக போற்றப்பட்டதையும் இன்றும் நாகா இனக் குழுவினரது வீடுகளில் மனித மண்டையோடுகள் குவியல் குவியலாக போடப்பட்டிருப்பதையும் காண முடியும்.
இதனால் நிச்சயம் நரபலி கொடுக்கத்தான் மனித தலையை வெட்டியிருப்பதாக கூறப்படுகிறது
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications