கருணாநிதியின் 3 பாதுகாப்பு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் ரெய்டு

சோதனைக்குள்ளாகியுள்ள அதிகாரிகளின் பெயர்கள்- டிஎஸ்பி பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் கணேசன், வினோதன் ஆகியோர். நெசப்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட 6 இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருகிறது.
கடந்த 2008ம் ஆண்டு முறைகேடாக வீட்டு வசதி வாரியத்தின் வீடுகளையும், வீட்டு மனைகளையும் இவர்கள் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த ரெய்டு நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎஸ்பி பாண்டியனின் வீடு மயிலாப்பூரில் உள்ளது. அங்கு காலை 7 மணி முதல் சோதனை நடந்தது. அதேபோல கணேசனின் வீடு நெசப்பாக்கத்தில் உள்ளது. வினோதன் வீடு கே.கே.நகரில் உள்ளது.
சர்ச்சை என்ன?
பாண்டியன், கணேசன் மற்றும் வினோதன் ஆகிய மூவருமே கடந்த 1998ம் ஆண்டு மார்ச் மாதம் முகப்பேர் ஏரி திட்டத்தில் 4780 சதுர அடி நிலம் ரூ.75 லட்சத்துக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டில் இடம் வாங்கினர். அந்த இடத்தை உடனடியாக கிரீன்வேஸ் சாலையில் வசிக்கும் கவுரி மற்றும் அவரது மகள் பத்மா ஆகியோரிடம் 3 பேரும் விற்பனை செய்தனர். 3 பேருக்கும் அடுத்தடுத்த இடம் என்பதால் கவுரி மற்றும் பத்மா ஆகியோர் வாங்கினர்.
இந்தப் பணத்தைக் கொண்டு உடனடியாக வீட்டு வசதி வாரியத்துக்கான பணத்தையும் ஒரே நாளில் கட்டினர். இது அரசு விதிமுறையை மீறியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு புகார்கள் வந்தன.
ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர், எப்படி ரூ.75 லட்சத்தை ஒரே நாளில் கட்ட முடிந்தது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து ஏடிஜிபி டி.கே.ராஜேந்திரன் டிஐஜி வெங்கட்ராமன், எஸ்பி துரைக்குமார் ஆகியோரது மேற்பார்வையில் கூடுதல் எஸ்பி சுப்பையா, டிஎஸ்பிக்கள் சோமசுந்தரம், சுதாகர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர்தான் இன்று ரெய்டில் ஈடுபட்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications