கிங்பிஷர் நிறுவனத்துக்கு சோதனை மேல் சோதனை - 40 வங்கிக் கணக்குகள் முடக்கம்

Subscribe to Oneindia Tamil

Kingfisher Airlines
டெல்லி: கிங்பிஷர் நிறுவனம் கடுமையாக நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ரூ40 கோடி சேவை வரி பாக்கிக்காக அந்நிறுவனத்தின் 40 வங்கிக் கணக்குகள் தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சேவை வரிகள் இயக்குநர் சோலங்கி கூறியுள்ளதாவது:

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சேவை வரியாக செலுத்த வேண்டியதில் ரூ40 கோடி பாக்கி வைத்திருந்தது. இந்த பாக்கியை கட்டுவதற்கு பிப்ரவரி 29ந்தேதி வரை கெடு விதித்திருந்தோம். ஆனால் கெடு காலத்துக்குள் கிங்பிஷர் நிறுவனம் பாக்கித் தொகையை செலுத்தவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக அந்நிறுவனத்தின் 40 வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்துள்ளோம் என்றார் அவர்.

பிப்ரவரி 29-ந் தேதிக்குள் ரூ20 கோடியை செலுத்துவதாக கிங்பிஷர் நிறுவனம் உறுதி அளித்திருந்தது. ஆனால் அதை செலுத்தாததால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிங்பிஷர் நிறுவனம் ரூ70 கோடி சேவை வரி செலுத்த வேண்டியிருந்தது. கடந்த நவம்பர் மாதம் ரூ30 கோடியை செலுத்திவிட்டது.

கடந்த 4 மாதங்களில் 4 வது முறையாக கிங்பிஷர் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. கடந்த மாதம் வருமான வரித்துறை கிங்பிஷர் வங்கிக் கணக்கை முடக்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+