கொஞ்ச நாளைக்கு 'புலிகளைப்' பார்க்க முடியாது!
முதுமலை : நீலகிரி மலைப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் மார்ச் 5 ம் தேதி முதல் முதுமலை புலிகள் காப்பகத்தை காலவரையின்றி மூட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு விலை உயர்ந்த மரங்களும், மூலிகைத் தாவரங்கள் காணப்படுகின்றன. இந்த வனப்பகுதியில் யானைகள், புலிகள், மான்கள், சிறுத்தைகள், கரடிகள், காட்டெருமைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன.
விலங்குகள் இடம் பெயர்வு
கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே நீலகிரி மலைப்பகுதியில் வறட்சி அதிகரித்துள்ளது. நீர்நிலைகளும் வறண்டு விட்டதால் வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் முதுமலை வனப்பகுதிகளில் உள்ள மான்கள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பசுந்தீவனங்களையும், தண்ணீரையும் இடம்பெயரத்தொடங்கியுள்ளன.பசுந்தீவனங்கள் கிடைக்காமல் வளர்ப்பு யானைகளும் சிரமம் அடைந்துள்ளன.
இதனால் காய்ந்த சுள்ளிகள் மற்றும் விறகுகளை வனத்தில் சேகரித்து யானைகள் மூலம் கொண்டுவந்து தீ மூட்டி உணவு சமைத்து அவற்றுக்கு பாகன்கள் கொடுத்து பசியாற்றி வருகிறார்கள்.
மார்ச் 5 முதல் முட முடிவு
வறட்சி காரணமாக தீ விபத்து ஏற்படுவதை தடுக்க சென்னை முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் உத்தரவின் பேரில் முதுமலை புலிகள் காப்பகம் நாளை மறுநாள் (5 ந் தேதி) முதல் காலவரையின்றி மூடப்படுகிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வருகிற 5 ந் தேதி முதல் முதுமலையில் வனத்துறை சார்பில் நடைபெற்று வரும் யானை சவாரி, வாகன சவாரிகள் ரத்து செய்யப்படும். மேலும் வனத்துறை சார்பில் முதுமலை பகுதியில் இயங்கும் தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடப்படும். சுற்றுலா பயணிகள் முதுமலை வனப்பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்படும். முதுமலை வனப்பகுதியில் மழை பெய்து மீண்டும் பசுமை திரும்பிய பிறகே திறக்கப்படும். என்று முதுமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குனர் அமீர்காஜா தெரிவித்துள்ளார்.
முதுமலை காப்பகம் ஆண்டுதோறும் வறட்சி ஏற்படும்போது ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மூடப்படும். ஆனால் இந்த ஆண்டு தற்போதே கடும் வறட்சி நிலவுவதால் ஒரு மாதத்துக்கு முன்பாகவே மூடப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications