காதலிக்க மறுத்ததால் வெறிச்செயல்- மாணவியை கொன்ற கும்பல் கைது!
சீர்காழி: காதலிக்க மறுத்ததால் சீர்காழி மாணவி ராதிகாவை தூக்கில் தொங்கவிட்ட இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி திட்டை சாலையில் உள்ள நங்கநள தெருவை சேர்ந்தவர் ராஜீ. இவரது மகள் ராதிகா(வயது12). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை ராதிகா வழக்கம்போல பள்ளிக்கு சென்றார். அதன் பின்னர் பள்ளி முடிந்து மாலை 5.30 மணி வரை வீடுதிரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் அமுதா மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை. இந்நிலையில் வீட்டின் பின் பக்கத்தில் உள்ள நார்த்தங்காய் மரக்கொல்லையில், சுடிதார் துப்பட்டாவால் தூக்கில் மாணவி ராதிகா பிணமாக தொங்கினார். இதை கண்ட சிலர் ராதிகாவின் தாய்க்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் அலறி அடித்து ஓடி சென்று பிணமாக தொங்கிய மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாணவி ராதிகா உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
ஒருதலைக்காதலால் கொலை
காவல்துறையின் விசாரணையில் ராதிகாவை அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்தது.
சீர்காழி நேரு காலனியை சேர்ந்தவர் அஜீத்குமார்(17). கட்டிட தொழிலாளியான இவர் ராதிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டுக்கு சாப்பிடுவதற்காக மாணவி ராதிகா வந்துள்ளார்.
இதை நோட்டமிட்டு அஜீத்குமாரும், அவரது நண்பர் சென்னையை சேர்ந்த விஜயும், பின் தொடர்ந்து சென்றுள்ளனர். வீட்டின் பின்புறம் உள்ள நார்த்தங்காய் மரகொல்லைக்கு காய்களை பறிக்க ராதிகா சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அஜீத்குமார், ராதிகாவை பார்த்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.இதற்கு ராதிகா மறுப்பு தெரிவித்து அஜித்குமாரை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் உடனே ராதிகா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கினார். பின்னர் ராதிகாவை, விஜய் பிடித்து கொள்ள அஜித்குமார் துப்பட்டாவால் மரத்தில் கட்டி ராதிகாவை தூக்கில் தொங்க விட்டார். இதில் சிறிது நேரத்தில் ராதிகா துடிதுடித்து இறந்துள்ளார்.
இக்கொலை தொடர்பாக அஜித்குமார் மற்றும் விஜயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications