கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொழில்நீர்தியாக சுதாரிக்கவில்லை: அமைச்சர் வீரப்ப மொய்லி

இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா என்னை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு நான் சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளேன். இந்த நிலையில் கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு அவர் சாதகமான முடிவை தெரிவிப்பார் என நினைக்கிறேன்.
தொழில் ரீதியாக அந்த நிறுவனம் சுதாரித்துக் கொள்ளவில்லை, இந்த சூழ்நிலையில் மல்லையா தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை திறம்பட நடத்துவார். அவரது முயற்சியால் அந்த நிறுவனம் கடன் சுமையில் இருந்து மீண்டு விடும் என எதிர்பார்க்கிறேன்.
இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா உள்ளிட்ட நமது சில விமான நிறுவனங்கள் ஒட்டுமொத்த சிக்கலை சந்தித்ததற்கு அந்த நிறுவனங்களின் நிர்வாக திறன் குறைபாடுதான் காரணமாகும். இதன் மூலம் மற்ற விமான நிறுவனங்கள் பாடம் கற்றுக் கொண்டு சிக்கலில் இருந்து விடுபடவேண்டும் என்றார் அவர்.
கிங்பிஷர் நிறுவனத்துக்கு ரூ.7,057 கோடிக்கு கடன் இருக்கிறது. மேலும் ரூ.6 ஆயிரம் கோடி நட்டத்தையும் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அந்த நிறுவனம் நிதிநெருக்கடியில் தத்தளித்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications