ஆந்திராவில் மாவோயிஸ்டு வேட்டைக்கான பரிசுத்தொகை பலமடங்கு அதிகரிப்பு

ரூ25 லட்சம்
மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர்களான கணபதி என்ற முப்பல்ல லட்சுமண ராவ், மல்லோஜூல வேணுகோபால் ஆகியோரது தலைக்கு ரூ. 25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மாவோயிஸ்ட் மத்திய குழுவில் இடம்பெற்றிருக்கும் உறுப்பினர்களின் தலைக்கு தற்போது ரூ12 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ரூ25 லட்சமாக அதிகரித்துள்ளது.
ரூ15 லட்சம்
மாநிலக் குழுவில் இடம்பெற்றிருக்கும் மாவோயிஸ்டுகளின் தலைக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ10 லட்சம் இனி ரூ15 லட்சம்! இதேபோல் மண்டலக் குழு உறுப்பினர்களுக்கான ரூ8 லட்சம், இனி ரூ10 லட்சம். மாவட்ட கமிட்டி செயலாளர்களின் தலைக்கு முன்பு ரூ5 லட்சம் இனி ரூ8 லட்சம். மாவட்ட கமிட்டி உறுப்பினர்களுக்கு முன்பு ரூ3 லட்சம் இப்போது ரூ5 லட்சம்.
கொரில்லா கமாண்டர்களுக்கு ரூ2 லட்சத்திலிருந்து ரூ3 லட்சம், துணை கமாண்டர்களுக்கு ரூ1 லட்சத்திலிருந்து ரூ2 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"மாவோயிஸ்டுகள் சரணடைந்தால் அவர்களுக்கு இத்தொகையும் அல்லது என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டால் தகவல் கொடுத்தவருக்கும் சுட்டுக் கொன்றவருக்கும் இத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்" என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் மத்திய அரசு ஆயுதங்களை ஒப்படைக்கும் மாவோயிஸ்டுகளுக்கான பரிசுத்தொகையை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. லைட் மெஷின் கன் ரகத்துக்கு ரூ5 லட்சமும் ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஒப்படைப்போருக்கு ரூ3 லட்சமும் நிர்ணயித்திருந்தது.












Click it and Unblock the Notifications