30ம் தேதி ராஜ்யசபா தேர்தல்: ஜேட்லி, ஜோஷி, சிங்வி மீண்டும் தேர்வாவார்களா?
டெல்லி: 58 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவதையடுத்து வரும் 30ம் தேதி 58 இடங்களுக்கான தேர்தல் நடக்கிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
15 மாநிலங்களைச் சேர்ந்த 58 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது. இதையடுத்து இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து ராஜ்யசபா எம்.பிக்களைத் தேர்ந்தெடுப்பார்கள். தேவைப்படும் இடங்களில் 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
உத்தர பிரதேசத்தில் 10 இடங்கள், ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 6 இடங்கள், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 5 இடங்கள், கர்நாடகா மற்றும் குஜராத்தில் தலா 4 இடங்கள், ஒடிஷா மற்றும் ராஜஸ்தானில் தலா 3 இடங்கள், ஜார்க்கண்டில் 2 இடங்கள், சத்தீஸ்கர், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் தலா 1 இடத்திற்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
வரும் 19ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வரும் 20ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும், மேலும் வேட்புமனுக்களை வாபஸ் பெற வரும் 22ம் தேதி கடைசி நாளாகும். பீகாரில் மட்டும் வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 23ம் தேதி ஆகும்.
ஏப்ரல் 2 அல்லது 3ம் தேதியில் பதவிக்காலம் முடியும் எம்.பி.க்கள் விவரம் வருமாறு,
ராஜ்யசபா துணைத் தலைவர் கே. ரஹ்மான் கான், பாஜக எதிர்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, மத்திய அமைச்சர்கள் முகுல் ராய், விலாஸ் ராவ் தேஷ்முக், தாசரி நாராயண ராவ், சஞ்சீவ ரெட்டி, காங்கிரஸின் ராஷித் அல்வி, அபிஷேக் மனு சிங்வி, பாஜகவின் ரவி சங்கர் பிரசாத், ராஜீவ் சந்திரசேகர், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.வி. மைசுர ரெட்டி, கே. கேசவ ராவ், ஹேமமாலினி, கல்ராஜ் மிஸ்ரா, வினய் கத்தியார் ஆகியோர்.
இவர்களில் முக்கிய்த தலைவர்களான ரஹ்மான்கான், அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பலரும் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications