சங்கரன்கோவிலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் கார் பறிமுதல்!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறி கட்சிக் கொடியுடன் வந்த தமிழக போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் காரை போலீஸார் மடக்கிப் பிடித்துப் பறிமுதல் செய்தனர். இன்னொரு அதிமுக பிரமுகரின் காரை பிடித்த போலீஸார் அதிலிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
சங்கரன்கோவில் தொகுதி முழுவதும் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தீவிர வாகனத் தணிக்கை, சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. தொகுதியின் எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் சோதனை போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் ஒருவர் கட்சிக் கொடி படபடக்க காரில் வேகமாக வந்தார். இதையடுத்து காரை தடுத்து நிறுத்திய அதிகாரிகளும், போலீஸாரும் காரை பறிமுதல் செய்தனர். காரில் வந்த அமைச்சரின் உறவினர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, நடுவப்பட்டி என்ற இடத்தில் நடந்த வாகன சோதனையின்போது காரில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்த அதிமுக பிரமுகர் ஜெயராஜின் கார் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications