தானேவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.144 கோடியில் உதவிகள்-ஜெ. உத்தரவு

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தானே' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை மற்றும் இதர இடுபொருட்கள் அடங்கிய சிறுதளைகள், கரும்பு விவசாயிகளுக்கு சுழல்விசை களையெடுக்கும் கருவி, பயறுவகைப் பயிர்சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன கருவிகள், பவர்டில்லர், பம்புசெட்டுகள், சுழற்கலப்பைகள், விசைத்தெளிப்பான்கள், நீர் தெளிப்பான், தோட்டக்கலைப் பயிர் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன
கருவிகள், சிறுதொழில் வணிக செயல்பாடுகள் மேற்கொள்ள உதவித் தொகை, சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி போன்ற ரூ.143 கோடியே 79 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து, 25 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
வேளாண் விற்பனை முனைய வளாகம்
விவசாயிகள் உற்பத்தி செய்த வேளாண் விளைபொருட்களில் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பை தவிர்த்து பாதுகாப்பான முறையில் சேமித்து, மதிப்புக்கூட்டி லாபகரமான விலைக்கு விற்பனை செய்வதற்காக, ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட வேளாண் விற்பனை முனைய வளாக கட்டிடம் ரூ.120 கோடியே 62 லட்சத்தில் அமைப்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டினார்.
குளிர்பதனக் கிடங்குகள்
ரூ.15 கோடியில் உழவர் மையங்கள், ரூ.5 கோடியே 30 லட்சத்தில் உயிர் உர தயாரிப்பிற்கு தேவையான பழுப்பு நிலக்கரி சேமிப்புக் கிடங்குகள், ரூ.38 கோடியே 20 லட்சத்தில் குளிர்பதனக் கிடங்குகள், புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் நுண்ணூட்டக் கலவை சேமிப்புக் கிடங்கு மற்றும் பயிற்சிக் கூடம், ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் கடைகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஊரக
கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் கூடிய 21 சேமிப்புக் கிடங்குகள் ஆகிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ.3 கோடியே 12 லட்சத்தில் கட்டப்பட்டு உள்ள 5 விதைக் கிடங்குகள், 2 வேளாண் வணிக மையங்கள், 7 சேமிப்பு கிடங்குகள், 4 சேகரிப்பு மையங்கள் மற்றும் 22 உலர் களங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்துவைத்தார்.
நிலக்கரி சேமிப்பு கிடங்குகள்
ரூ.15 கோடியில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் அருப்புக்கோட்டை, ராமநாதபுரம், திருமங்கலம், திண்டுக்கல், தஞ்சாவூர், மண்ணச்சநல்லூர், பொள்ளாச்சி, சத்தியமங்கலம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இடங்களில் உழவர் மையங்கள் கட்டவும், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.5 கோடியே 30 லட்சத்தில் கடலூர், ராமநாதபுரம், சேலம், குடுமியான்மலை, திருச்சி, சாக்கோட்டை,
உத்தமபாளையம், பவானி, அவினாசி, பாலக்கோடு, நீடாமங்கலம், காட்டங்குளத்தூர், போளூர் ஆகிய இடங்களில் உயிர் உர தயாரிப்பிற்கு தேவையான பழுப்பு நிலக்கரி சேமிப்புக் கிடங்குகள் அமைக்கவும்,
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் நுண்ணூட்டக் கலவை சேமிப்புக் கிடங்கு அமைக்கவும், அட்மா திட்டத்தின்கீழ் குடுமியான்மலையில் பயிற்சிக்கூடம் கட்டவும், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.38 கோடியே 20 லட்சத்தில் தர்மபுரி மாவட்டம்- தர்மபுரி, ராமநாதபுரம் மாவட்டம்- பரமக்குடி, ஈரோடு மாவட்டம்- கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் 5 குளிர்பதனக்
கிடங்குகள் கட்டுவதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
கடலூர் மாவட்டம்- கடலூர், திருவண்ணாமலை மாவட்டம்- ஆரணி, ஈரோடு மாவட்டம்- புஞ்சைப்புளியம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம்- வடக்கிபாளையம் ஆகிய இடங்களில் 5 ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் கடைகள், சேலம் மாவட்டம்- ஆத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டம்- பவானி ஆகிய இடங்களில் 2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்.
ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டம்- கொடுமுடி, அவல்பூந்துறை, கடலூர் மாவட்டம்- விருத்தாச்சலம், கடலூர் ஓ.டி., விழுப்புரம் மாவட்டம்- சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, சேலம் மாவட்டம்- நாமகிரிப்பேட்டை, ஓமலூர், சேலம், மதுரை மாவட்டம்- உசிலம்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம்- கும்பகோணம், தஞ்சாவூர், பாபநாசம், அரியலூர்
மாவட்டம்- ஜெயங்கொண்டம், விருதுநகர் மாவட்டம்- விருதுநகர், தேனி மாவட்டம்- தேனி, கம்பம் ஆகிய இடங்களில் தலா 2000 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் கூடிய 21 சேமிப்புக் கிடங்குகள் கட்டவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
உலர்களங்கள்
ரூ.3 கோடியே 12 லட்சத்தில் 5 இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட விதைக் கிடங்குகள், தர்மபுரி மாவட்டம்- பாலக்கோடு, திருவள்ளூர் மாவட்டம்- தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் 2 வேளாண் வணிக மையங்கள், பெரம்பலூர் மாவட்டம்- கிழப்புலிïர், திருவள்ளூர் மாவட்டம்- புலிïர், வேலூர் மாவட்டம்- கோடம்பாக்கம், ரெட்டிவலம், சிறுவாலயம், விழுப்புரம் மாவட்டம்- செய்ïர், தென்சீரனூர் ஆகிய இடங்களில் 7
சேமிப்பு கிடங்குகள், மதுரை மாவட்டம்- சாப்டூர், வேலூர் மாவட்டம்- கீழவீதி, வாஞ்சூர், வாங்கூர் ஆகிய இடங்களில் 4 சேகரிப்பு மையங்கள்.
கடலூர் மாவட்டம்- சீமக்கோட்டை, மதுரை மாவட்டம்- விராதனூர், தர்மபுரி மாவட்டம்- முருக்கம்பட்டி, பெரம்பலூர் மாவட்டம்- கீழப்புலிïர், நெய்குப்பை, ராமநாதபுரம் மாவட்டம்- கடமங்கலம், சிவகங்கை மாவட்டம்- மாங்குடி, பெரமனூர், தஞ்சாவூர் மாவட்டம்- சொக்கநாதபுரம், பன்னவாயல், திருவண்ணாமலை மாவட்டம்- ரெட்டியார்பாளையம், நரிïர், வேலூர் மாவட்டம்- கீழவீதி, ரெட்டிவலம், விழுப்புரம்
மாவட்டம்- தென்கீரனூர், விருதுநகர் மாவட்டம்- சுப்பிரமணியபுரம், நாலூர்சீனிமடை, காட்டானூர், சோலைச்சேரி, வடக்கு வெங்கநல்லூர் ஆகிய இடங்களில் உலர் களங்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வீடியோகான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
டிராக்டர்கள்
வேளாண்மைத் துறை பணியாளர்கள் களப்பணிகளை காலத்தே செவ்வனே செய்து முடிக்கும் வகையில் வட்டார அளவிலான விரிவாக்க பணியாளர்களுக்கு 213 ஜீப்புகள் 16 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவிலும், வயல்மட்ட அலுவலர்களுக்கு கையடக்கக் கருவிகள் மற்றும் புரொஜெக்டர்கள் 38 லட்சம் ரூபாய் செலவிலும், அரசு விதைப்பண்ணைகளுக்கு சிறிய டிராக்டர்கள் ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய் செலவிலும்,
விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வாடகைக்கு வழங்க வேளாண்மை பொறியியல் துறைக்கு டிராக்டர்கள் ஒரு கோடியே 72 லட்சத்திலும் என மொத்தம் ரூ.19 கோடியே 82 லட்சத்தில் வேளாண் உபகரணங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
36 வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு
வேளாண்மைத்துறையில் பணியின் போது இயற்கை எய்திய அரசு ஊழியர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 36 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications