ஈரானுக்கு பணம் அனுப்பும் சிக்கலுக்கு மத்திய அரசு புதிய தீர்வு
டெல்லி: அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை இறுக்கி, அந் நாட்டின் மத்திய வங்கியோடு பணப் பரிமாற்றம் செய்யவும் தடை போட்டுள்ளதால், அந் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெரும் சிக்கலில் ஆழ்ந்துள்ளன என்பதை சமீபத்தில் சுட்டிக் காட்டியிருந்தோம் (கச்சா எண்ணெய்க்காக ஈரானுக்கு பணம் அனுப்ப இந்தியா படும் பாடு!)
இப்போது, அந்தப் பிரச்சனைக்கு மத்திய அரசு ஒரு தீர்வைக் கண்டுள்ளது. இந்தியாவிடம் இருந்து டாலருக்குப் பதில் ரூபாயாகவே வாங்கிக் கொள்ள ஈரான் முன் வந்துள்ளது. யுகோ வங்கி மூலமாக இந்த பணப் பரிவர்த்தனை நடக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே சர்வதேச பொருளாதாரத் தடைகளால் கடந்த செப்டம்பர் முதல் ஈரானின் கரன்சியான ரியாலின் மதிப்பு 50 சதவீதம் வரை சரிந்துவிட்டது. இதனால் துபாய் உள்ளிட்ட நாடுகளின் துறைமுகங்கள் மூலமாக ஈரானுக்கு சரக்கு அனுப்பிய இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
ஈரானின் கரன்சி மதிப்பு குறைந்துவிட்டதால், அவர்களுக்கு சரக்கை அனுப்ப உதவும் துபாய் உள்ளிட்ட நாடுகள், இந்திய ஏற்றுமதியாளர்களிடம் ஏராளமான சலுகைகளைக் கோருகின்றன. அதாவது ஈரானுக்கு சரக்குகுளை அனுப்ப தங்களது கரன்சியை இடைச் செலவீனமான பயன்படுத்தவதால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், இந்த நஷ்டத்தை இந்தியா தான் ஈடு செய்ய வேண்டும் என்றும் கோரி வருகின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications