மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம்: அன்புமணி மீது சிபிஐ வழக்கு

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ளது இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி. அந்த கல்லூரியில் போதிய வசதிகள் இல்லையென்று கூறி அதற்கு அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி அப்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கடந்த 2008ம் ஆண்டு அந்த கல்லூரிக்கு அனுமதி வழங்கினார் என்று புகார் எழுந்தது.
இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் கடந்த 2008ம் ஆண்டு அந்த கல்லூரியில் ஆய்வு செய்து அங்கு கல்வி கற்றுக் கொடுக்க 30 சதவீத வசதிகள் மட்டுமே உள்ளது என்பதை கண்டறிந்தனர். அந்த கல்லூரியில் மருத்துவமனையில் 40 டாக்டர்கள் பணியாற்றுவது போன்று போலி கையெழுத்து போடப்பட்டதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வசதிகள் இல்லாத அந்த கல்லூரியில் மாணவர்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்தது. அதன் பிறகு மத்திய சுகாதாரத் துறை டாக்டர்கள் 2 பேர் அந்த கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு அது தொடர்ந்து செயல்படலாம் என்று தெரிவித்தனர். அந்த கல்லூரிக்கு அனுமதி வழங்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் 2 பேரும் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸுக்கு பரிந்துரை செய்தனர். அவரும் அனுமதி வழங்கினார். ஆனால் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்ற்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து 2 டாக்டர்கள், 2 மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து 2 டாக்டர்கள், 2 மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications