கூடங்குளம் தொடர் போராட்டங்கள் எதிரொலி: கூடுதலாக ரூ2,653 கோடி செலவு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாதம் மின் உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் தற்போது 3 மாதங்களைக் கடந்த நிலையிலும் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.
கூடங்குளத்தில் முதலாவது யூனிட்டில் 99.2 விழுக்காடு பணிகளும் இரண்டாவது யூனிட்டில் 94.6 விழுக்காடு பனிகளும் நிறைவடைந்துவிட்டன. ஆனால் தொடர் போராட்டங்களால் திட்டமிட்டபடி பணிகள் நிறைவடையவில்லை.
கூடங்குளம் அணுமின் திட்டத்தை ரூ13,171 கோடியில் நிறைவேற்ற முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பணிகள் முழுமையடாததால் தற்போது திட்டத்துக்கான செலவு ரூ15,824 ஆக அதிகரிக்கும் எனத் தெரிகிறது. அதாவது கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டங்களால் திட்டமிட்ட செலவுத் தொகையை விட ரூ2,653 கோடி கூடுதல் செலவாக உள்ளது.
இதுமட்டுமின்றி கூடங்குளம் அணுமின் திட்டத்தை முடக்குவதால் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்க வேண்டிய நிர்பந்தமும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நேரிட்டுள்ளது. இந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும் கூடுதல் செலவாகிறது.
இதனால் கூடங்குளம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டிய நெருக்கடி மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.
கூடங்குளம் அணு உலை நிறுவுவதற்காக ரசியா, 1812 மில்லியன் டாலர் மதிப்பிலான உபகரணங்களை கடனுதவி அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications