கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்க வேண்டும்: ரஷிய துணை தூதர் வேண்டுகோள்
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று சென்னையில் உள்ள ரஷிய துணை தூதர் நிக்கோலே ஏ லிஸ்டோபாடோவ் கூறி உள்ளார்.
ரஷியாவில் புதிய அதிபரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. சென்னையில் உள்ள ரஷிய துணை தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் இந்த தேர்தலில் வாக்களிக்க அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரஷிய துணை தூதர் நிக்கோலே ஏ லிஸ்டோபாடோவ் மற்றும் தூதரக அதிகாரிகள் வாக்களித்தனர்.
வாக்கு அளித்த பின் துணை தூதர் நிக்கோலே ஏ லிஸ்டோபாடோவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றியும், மின் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறுவதை அமெரிக்காவில் உள்ள சில அமைப்புகள் விரும்பவில்லை என்றும், வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை இங்குள்ள சில தொண்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருந்தார்.
பிரதமர் மன்மோகன் சிங் அவ்வாறு கூறியதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவரது கருத்தை நம்பாமல் இருக்க எந்த காரணமும் இல்லை. ஆனால் அவர் கூறியது போன்ற சூழ்நிலை ஏற்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்று நம்புகிறோம். கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் தனது உற்பத்தியை தொடங்க வேண்டியதன் அவசியத்தை இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications