மேலும் 2 கொள்ளையர்களின் உடல்களை அடையாளம் காட்டி எடுத்து் சென்ற உறவினர்கள்
சென்னை: சென்னை வேளச்சேரியில் சுட்டுக் கொல்லப்பட்ட வடமாநில கொள்ளையர்களில் மேலும் 2 பேரின் உடல்கள் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. இன்னமும் 2பேர் உடல்கள் அடையாளம் காட்டப்படவில்லை.
வேளச்சேரி சம்பவம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கிக் கொள்ளையில் தொடர்புள்ள வடமாநிலத்தைச் சேர்ந்த 5 கொள்ளையர்களை போலீசார் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டன.
வினோத் குமார் என்கிற சுஜாய் குமார் ரே என்ற கொள்ளையனின் உடலை அவனது தந்தை அடையாளம் காட்டினார். பின்னர் அவனது உடல் விமானத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள அவனது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
ராஜீவ்குமார், வினய்பிரசாத் ஆகிய மேலும் 2 கொள்ளையர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் நேற்று அடையாளம் காட்டினார்கள். மாஜிஸ்திரேட் முன்னிலையில் அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கில் அடையாளம் காட்டப்பட்டது.
ராஜீவ்குமாரின் மாமா ஜித்தேந்தர், வினய்பிரசாத்தின் தாத்தா துர்கா பிரசாத் ஆகியோர் வந்திருந்து அடையாளம் காட்டினார்கள். அவர்களது வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார். பின்னர் அவர்களது உடல்கள் ரெயில் மூலம் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பீகார் மாநிலம் பாட்னாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
மேலும் 2 பேர்களின் உடல்கள் அடையாளம் காட்டப்படாமல் அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications