2014-15ம் ஆண்டு முதல் புதிய என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது!
மும்பை: வரும் 2014-15 கல்வியாண்டு முதல் புதிதாதக பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி அளிக்கக் கூடாது என்று அகில இந்திய தொழில்நுட்பக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதுவும் குறிப்பாக தென்னிந்தியாவில் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல பெருகிவிட்டன. தற்போது நாடு முழுவதும் 3,393 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 15 லட்சம் இடங்கள் உள்ளன. மேலும் 3,900 மேலாண்மையியல் கல்லூரிகள் உள்ளன. அதில் 3.5 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் 70 சதவீத கல்லூரிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன.
அதிக அளவில் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளதால் ஏராளமான இடங்கள் நிறப்பப்படாமலேயே காலியாக உள்ளன. இதனால் இனி புதிதாக கல்லூரிகள் துவங்க அனுமதிக்கக் கூடாது என்று தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க அகில இந்திய தொழில்நுட்பக் குழு கூட்டம் மும்பையில் நடநத்து. இந்த கூட்டத்தில் புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்விக்குழு தலைவர் மந்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
பொறியியல் கல்லூரி துவங்குபவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பே கட்டுமானப் பணியை துவங்கி விடுகின்றனர். அதனால் தற்போது கட்டுமானப் பணியைத் துவங்கியுள்ளவர்கள் பாதிக்கப்படாத வகையில் 2014-15ம் கவ்வியாண்டு முதல் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது. இது குறித்து அந்த கல்வியாண்டின் துவக்கத்தில் தொழில்நுட்பக்குழு கூடி முடிவு எடுக்கும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications