பகுஜன் சமாஜ் அரசு வைத்த மாயாவதி, யானை சிலைகளை இடிக்க மாட்டோம்-அகிலேஷ்

மாயாவதி முதல்வராக இருந்தபோது பல நூறுகோடி செலவில் லக்னோவிலும் பிற இடங்களிலும் ஏராளமான நினைவிடங்கள், பூங்காக்களை அமைத்தார் மாயாவதி. மேலும் அங்கு கன்ஷிராம், அம்பேத்கர் மற்றும் தனது சிலைகளை பெருமளவில் நிறுவினார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான யானையின் சிலைகளையும் நூற்றுக்கணக்கில் நிறுவினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி சுப்ரீம் கோர்ட் வரை சென்றது.
தேர்தல் பிரசார சமயத்தில், இந்த சிலைகளை துணியைப் போட்டு தேர்தல் ஆணையம் மூடி மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த சிலைகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அகற்றுவோம் என்று ஏற்கனவே கூறியிருந்தார் அகிலேஷ் யாதவ். ஆனால் தற்போது அப்படிச் செய்ய மாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முலாயம் சிங் யாதவின் மகனான அகிலேஷ் இதுகுறித்துக் கூறுகையில், பெரும் பொருட் செலவில் இந்த சிலைகளை உருவாக்கியுள்ளனர். இதை இடிக்கவும் மாட்டோம், அகற்றவும் மாட்டோம். பத்திரமாக இவை இருக்கும் என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்று கேட்டபோது, திறமையான நிர்வாகத்தைத் தராததே காரணம் என்றார் அகிலேஷ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications