தமிழர் பிரச்சனையில் மட்டும் மத்திய அரசு ஏன் மௌளம் சாதிக்கிறது: அதிமுக குற்றச்சாட்டு

ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் தலைமை வகித்தார்.
உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது,
இந்த உண்ணாவிரதப் போராட்டம் தமிழக அரசியலில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு எதிராக உள்ளன. ஐ.நா. சபையில் விசாரணை நடக்கையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக கருதி விசாரிக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலை குறித்து உலகத் தமிழர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியா ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தது மிகவும் அவமானகரமான செயல் என்றார்.
அதிமுக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் பேசியதாவது,
குட்டிமணி, ஜெகன், தங்கதுரை ஆகியோர் நாடு கடத்தப்படும் நிலை ஏற்பட்டபோது எம்.ஜி.ஆரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எம்.கல்யாணசுந்தரமும் ஒன்றாக இணைந்து செயல்பட்டனர். ஈழப் பிரச்சனைகள் மற்றும் பல பிரச்சனைகளில் எம்.ஜி.ஆருடன் இந்திய கம்யூனிஸ்ட் எப்போதும் இணைந்தே செயல்பட்டு வந்துள்ளது.
குஜராத் பிரச்சனைகளுக்கும், சீக்கியர் பிரச்சனைகளுக்கும் ஆதரவாக இருக்கும் மத்திய அரசு தமிழர் பிரச்சனைகளில் மட்டும் மௌனம் சாதித்து வருவதை அதிமுக கண்டிக்கிறது. ஐ.நா. சபையில் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கும் தீர்மானத்திற்கும், இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானத்திற்கும் அதிமுக ஆதரவளிக்கும் என்றார்.
இந்த போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications