பாரிமுனை எல்.ஐ.சி. அலுவலகத்தில் பயங்கர தீ: கம்ப்யூட்டர்கள், ஆவணங்கள் நாசம்
சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் இன்று காலை 7.30 மணிக்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கம்ப்யூட்டர்கள், அலுவலகப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசமாகின.
சென்னை பாரிமுனையில் பாம்பே மியூச்சுவல் பில்டிங் என்ற 7 மாடி கட்டிடம் உள்ளது. இதில் தரை மற்றும் முதல் தளத்தில் வங்கிகள் செயல்படுகின்றன. 3வது மாடியில் எல்.ஐ.சி. அலுவலகம் உள்ளது. இன்று காலை 7.30 மணிக்கு அலுவலகத்தை சுத்தம் செய்ய ஆட்கள் வந்தனர். அப்போது ஒரு அறையில் இருந்து புகை வருவதைப் பார்த்த அவர்கள் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்த உடனேயே திருவல்லிக்கேணி, எஸ்பிளனேடு, ராயபுரம் பகுதியில் இருந்து 8 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. ஆனால் அதற்குள் தீ மள, மளவென எரியத் துவங்கியது. தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் கட்டிடத்திற்குள் நுழைய தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டனர். பின்னர் ராட்சத ஏணியில் ஏறி 3வது மாடி ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அங்கிருந்த கம்ப்யூட்டர்கள், அலுவலகப் பொருட்கள், சேர், மேஜைகள், ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
3வது மாடியிலேயே பண வசூல் மையம் மற்றும் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு அறை உள்ளன. ஆனால் அவைக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications