ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு தீர்மானம்
நியூயார்க்: ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத் தொடரின் இறுதியில் இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு தீர்மானத்தை கொண்டு வர அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக ஐ.நா. சபையின் ஜெனீவா கிளைக்கான இலங்கை பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்டப் போரின்போது பல லட்சக்கணக்கான தமிழர்கள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டனர். சரணடைந்த விடுதலைப் புலிகளையும் ராணுவம் சித்ரவதை செய்து கொன்றது. இது குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. குழுவினர் இறுதி கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக அறிக்கை சமர்பித்தது.
சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்கிடையே இந்த தீர்மானத்தை தோல்வியடையச் செய்ய இலங்கை பல நாடுகளிடம் ஆதரவு கேட்டு வருகிறது. மேலும் இந்த தீர்மானத்தை இந்தியா நிச்சயம் எதிர்க்கும் என்ற இலங்கையின் பேச்சுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே கூட்டத் தொடரின் இறுதியில் இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு தீர்மானத்தை கொண்டு வர அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக ஐ.நா. சபையின் ஜெனீவா கிளைக்கான இலங்கை பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். இலங்கை மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் தோல்வியடைந்த நாடுகள் பட்டியலில் இலங்கையை சேர்க்க அமெரிக்கா முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications