தொடங்கியது பிளஸ்டூ தேர்வு... 8.22 லட்சம் பேர் எழுதுகிறார்கள்-காப்பியடிப்பதைத் தடுக்க நடவடிக்கை

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் 1,974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை மாநகரில் மட்டும் 139 தேர்வு மையங்களில் 50,201 மாணவ-மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
புதுச்சேரியில் 31 மையங்களில் 105 பள்ளிகளைச் சேர்நத் 12,042 மாணவ-மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இது தவிர 61,319 பேர் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர்.
வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வில் மாணவர்களை காப்பியடிப்பதை தடுக்க கண்காணிப்பு குழுக்களும், பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பிரச்சனைக்குரிய மையங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு தேர்வு துவங்கி முடியும் வரை கண்காணிப்பு குழுவினர் அங்கேயே இருந்து தேர்வுப்பணிகளை மேற்பார்வையிடுவார்கள்.
தேர்வு அறைக்குள் மாணவர்கள் ஷூ மற்றும் பெல்ட் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காப்பியடித்து சிக்கும் மாணவ-மாணவியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்வின்போது ஒழுங்கீனச் செயல்களி்ல் ஈடுபட்டு சிக்கி 184 பேர் தண்டனை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒழுங்கீனச் செயல்கள்களை பள்ளி நிர்வாகம் ஊக்குவித்தாலோ, உடந்தையாக இருந்தாலோ தேர்வு மையத்தினை ரத்து செய்யவும், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பள்ளி கல்வி இயக்குனருக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆள்மாறாட்டத்தை தவிர்க்கும் வகையில் பெயர் பட்டியலிலும், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலும் தேர்வர்களுடைய புகைப்படங்கள் பதியப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி முதல்கட்டமாக 1,937 தேர்வு மையங்களில் ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதனால் மின்தடை ஏற்படும்போது ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படும். மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதலாம். பொதுத் தேர்வு வரும் 30ம் தேதி முடிகிறது.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications