காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: மின்தடை நேரம் குறைப்பு

நெல்லை மாவட்ட மேற்கு பகுதிகளான செங்கோட்டை, சுரண்டை, ஆய்க்குடி, சேர்ந்தமரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான காற்றாலைகள் இயங்கி வருகின்றன. கடந்த ஒன்றரை மாதமாக போதிய அளவு காற்று இல்லாததால் இப்பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் காற்று வீசத் துவங்கியுள்ளதால் சுமார் 10 மணி நேரமாக இருந்த மி்ன்தடை திடீரென 2 மணி நேரமாகக் குறைந்துள்ளது.
இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது,
நல்ல காற்று வீசினால் ஒரு காற்றாலை தினமும் 6,000 யூனிட் மின் உற்பத்தி செய்யும். தற்போது திடீரென அதிகளவு காற்று வீசுவதால் மின்தடை நேரம் குறைந்துள்ளது. ஆயிரக்கணக்கான காற்றாலைகளுக்கும் சீரான காற்று வீசினால் மின் உற்பத்தி அதிகரித்துவிடும். மேலும் மின்தடை என்ற பேச்சுக்கு இடமில்லை.
காற்றாலைகள் மூலம் அளவுக்கு அதிகமாக மின்சாரம் கிடைத்தால் அதனை சேமித்து வைக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்றார்.
பிளஸ் டூ தேர்வு தொடங்கியுள்ள நிலையில் மின்வெட்டு இல்லாததால் மாணவ-மாணவியர் மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் தேர்வை எழுதத் தொடங்கியுள்ளனர். இது குறித்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தற்போது பிளஸ்டூ தேர்வு எழுதும் 8 லட்சத்திற்கும் அதிகமான பேர் அடுத்த ஆண்டு வாக்காளர்களாக மாறி விடுவார்கள். அந்த வாக்கு ஆளும்கட்சிக்கு எதிராக திரும்பிவிடக்கூடாது என்பதற்காகத் தான் அது இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications