'புகையில்லா உலகம்' வேண்டி ஆச்சாரியா மாணவர்கள் சைக்கிள் ரேஸ்
பெங்களூர்: பெங்களூர் ஆச்சாரியா கல்வி நிறுவனங்கள் சார்பில் புகையில்லா உலகம் என்ற கருத்தை வலியுறுத்தி வரும் 11ம் தேதி சைக்கிள் பந்தயம் நடைபெற உள்ளது.
பெங்களூர் ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழாவை முன்னிட்டு 'ஆச்சாரியா ஹப்பா 2012' என்ற பெயரில் கலை, நடனம், பேஷன் ஷோ, விளையாட்டு போட்டிகள் உட்பட பல நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது.
இதேபோல இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு இடையே வரும் 11ம் தேதி காலை 6 மணிக்கு புகையில்லா உலகம் என்ற கருத்தை வலியுறுத்தி சைக்கிள் பந்தயம் நடைபெற உள்ளது. இதில் ஆச்சாரியா கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தினமும் சைக்கிள் பயணம் செய்வதன் மூலம் பெங்களூர் போன்ற பெருநகரங்கள் மாசுபடுதலை குறைக்க முடியும். சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பெங்களூர் வாசிகளும், ஆச்சாரியா கல்லூரி மாணவர்களுடன் போட்டியில் பங்கேற்கலாம்.
பெங்களூர் நகரின் கன்டீரவா மைதானத்தில் இருந்து துவங்கும் சைக்கிள் பந்தயம் ஹட்சன் வளைவு, விதான் செளதா, ராஜ் பவன், பி.டி.ஏ. சந்திப்பு, காவேரி தியேட்டர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக மல்லேஸ்வரம் 18வது கிராசில் உள்ள மைதானத்தை அடையும். பந்தயத்தின் மொத்த தூரம் 10 கி.மீ. ஆகும். இப்போட்டியில் சுமார் 100 பேர் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
போட்டியில் பங்கேற்க வாடகைக்கு சைக்கிள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள [email protected]
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications