ஜெயலலிதாவின் எதிரிகள் பலமிழக்க வேண்டி கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் மகா சண்டி யாகம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினம் பிப்ரவரி 24ம் தேதி ஆகும். ஆனால் அவரது நட்சத்திரமான மகம் மார்ச் 7ம் தேதி வந்தது. பிறந்தநாளை விட நட்சத்திரம் வரும் அன்று பூஜைகள் செய்து வழிபட்டால் அதற்குரிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனால் தான் முதல்வர் ஜெயலலிதா தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதே வேளையில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் கர்நாடக மாநிலம் கொல்லூர் தாய் மூகாம்பிகை ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், கஜ பூசை, மகா சண்டி யாகம் ஆகியவை குருக்கள் மூர்த்தி சா தலைமையில் நடைபெற்றன.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஆண்டுதோறும் புகழ்பெற்ற கோவில்களில் கொண்டாடும் வழக்கமுடையவர்கள் கரூர் ஜெயலலிதா பேரவை முன்னாள் மாவட்டச் செயலாளர் நாகராஜன் மற்றும் அதிமுக நிர்வாகி பாலாஜி சண்முகம். அவர்கள் இந்த ஆண்டு தங்கள் கட்சித் தலைவியின் பிறந்தநாளை கொல்லூர் தாய்மூகாம்பிகை கோவிலில் கொண்டாடியுள்ளனர்.
இந்த யாகம் குறித்து நாகராஜனிடம் கேட்டபோது, மகா சண்டியாகம் நடத்தினால் எதிரிகளின் பலம் குறையும், வெற்றி குவியும், ஆயுள்விருத்தி ஏற்படும். அம்மா நன்றாக இருந்தால் தான் தமிழகம் நன்றாக இருக்கும். அதனால் தான் அம்மாவுக்காக மகா சண்டியாகம் நடத்தினோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications