ஆந்திராவின் முதல் பெண் ரயில் டிரைவர்: மகளிர் தினத்தில் புறநகர் ரயிலை இயக்கினார்!

ஆந்திராவைச் சேர்ந்த சத்யவதி 1999ல் பெங்களூருவில் ரயில்வே பணியில் சேர்ந்தார். அங்கு ரயில் இன்ஜின் உதவி டிரைவராக பணிபுரிந்த அவர் செகந்திராபாத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதன்பின்னர் 2005ம் ஆண்டு சரக்கு ரயில் இன்ஜின் டிரைவராக பதவி உயர்த்தப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக, பயணிகள் ரயில் இன்ஜின் உதவி டிரைவராக, பணியாற்றி வந்த சத்யவதி கடந்த ஜனவரியில், பயணிகள் ரயிலை இயக்குவதற்கான பயிற்சியையும், வெற்றிகரமாக முடித்தார்.
மகளிர் தின சிறப்பு பரிசு
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதன்கிழமையன்று கொண்டாடப்பட்டதை ஒட்டி ஹைதராபாத் புறநகர் பகுதிகளுக்கு இடையே இயக்கப்படும், லேடீஸ் ஸ்பெஷல் ரயிலை இயக்குவதற்கான பொறுப்பு, நேற்று சத்தியவதிக்கு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பலாக்னுமா ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, லிங்கம்பள்ளி ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் ரயிலை, உதவியாளர் யாருமின்றி தனியாக அவர் இயக்கினார். இதன் மூலம், ஆந்திராவின் ரயில் இன்ஜின் முதல் பெண் டிரைவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
பயணிகள் ரயிலை இயக்கியது குறித்து கருத்து தெரிவித்த சத்யவதி, இது என் வாழ்நாளில் முக்கியமான தருணம் என்று குறிப்பிட்டார். சரக்கு ரயில் இயக்குவதற்கும், பயணிகள் ரயில் இயக்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. நான் எனக்கு அளிக்கப்பட்ட பணியை மிகுந்த பொறுப்புணர்வோடு திறம்பட செய்வேன் என்று கூறினார்.
ரயிலை இயக்குவதற்கு முன்னும், இயக்கி முடித்த பின்னும், அதிகாரிகள், சக ஊழியர்கள் மற்றும் பயணிகள் உள்ளிட்டோர், சத்யவதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications