ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது: மன்மோகனுக்கு மோடி கடிதம்
அகமதாபாத்: ரயில் கட்டணத்தை உயர்த்த எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 2 வாரங்களில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நரேந்திரமோடி எழுதியுள்ள 4-வது கடிதம் இது.
ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்மோகனுக்கு மோடி எழுதிய கடிதம்:
நாடாளுமன்றம் இன்னும் சில நாட்களில் கூட உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தை தவிர்த்துவிட்டு ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. அப்படி உயர்த்துவது விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கை. இதை மத்திய அரசு கைவிட வேண்டும்.
5 மாநில தேர்தல் முடிவுக்காக காத்திருந்துவிட்டு அனைத்து மாநில மக்களையும் பாதிக்கும் வகையில் கட்டண உயர்வை அமல்படுத்தக்கூடாது.
உங்களது ஆட்சி விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ரயில்வே கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாகிவிடும்.
மேலும் மத்திய அரசின் சரக்குக் கட்டண உயர்வானது குஜராத்தின் மின்துறையை மிகக் கடுமையாக பாதிக்கும்.
கடந்த 2 வாரங்களில் தங்களுக்கு நான் எழுதுகிற நான்காவது கடிதம் இது. மத்திய அரசின் பொதுமக்களைப் பாதிக்கக் கூடிய விஷயங்களுக்காக ஒவ்வொருமுறையும் கடிதம் எழுத வேண்டியிருக்கிறது என்றும் அதில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாத தடுப்பு மைய பிரச்சனை, ரயில்வே பாதுகாப்பு படை விவகாரம், பருத்தி ஏற்றுமதிக்கு தடை உள்ளிட்டவைகளில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மோடி கடிதம் எழுதியிருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications