தற்போது நடப்பது கூட்டணிக் கட்சிகளின் சகாப்தம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்: நிதிஷ்குமார்
பாட்னா: இந்தியா இப்போது கூட்டணிக் கட்சிகளின் சகாப்தமாக திகழ்வதை மத்திய அரசு உணர்ந்து கொண்டு கூட்டாட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பாட்னாவில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் நிதிஷ்குமார் கூறியதாவது:
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவானது மாநிலக் கட்சிகளுக்கு பொதுமக்களின் ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறது. இதற்குக் காரணம் இந்த கட்சிகளால்தான் மாநிலங்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்ற முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
பஞ்சாப் தேர்தலில் வென்றுள்ள பிரகாஷ்சிங் பாதல் மற்றும் கருணாநிதி ஆகியோர் அரசியலில் முக்கியமான இடத்தில் இருப்பதற்கும் இதுவே காரணம். 1967-ம் ஆண்டு முதல் தமது அரசியல் இருப்பை நிலையாக வைத்திருக்கக் கூடிய பாதலுக்கு எனது வாழ்த்துகள்.
இது கூட்டணிக் கட்சிகளின் சகாப்தம். மத்திய அரசு இதை உணர்ந்து கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான கூட்டாட்சி முறைக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகும்.
நான்காவது அணி அமைக்கப்படுமா என்று கேட்கப்படுகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு அனைத்து அணிகளுக்கும் எனது வாழ்த்துகள்.
மக்களைப் பொருத்தவரை வளர்ச்சித் திட்டங்களை ஆதரிக்கிறார்கள். நல்ல நிர்வாகத்தை ஏற்றுக்கொள்கின்றனர். ஊழலை சகித்துக் கொள்ள மறுக்கின்றனர்.
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் புதிய அரசாங்கமானது நல்ல நிர்வாகத்தை நீதியுடனான வளர்ச்சித் திட்டங்களை கொடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அந்த மாநிலம் முன்னேறும் என்றார் நிதிஷ்குமார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications