சுரங்க முறைகேடு வழக்கிலிருந்து விடுபட்டதால் மீண்டும் முதல்வராவேன்-எடியூரப்பா

சுரங்க முறைகேடு வழக்கில் எடியூரப்பா மீதான எப்.ஐ.ஆரை நேற்று முன்தினம் கர்நாடக நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதைய்டுத்து நேற்று தமது ஆதரவாளர்களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.
சுரங்க முறைகேடு வழக்கில் நிரபராதி என நிரூபித்தால் நிச்சயம் எடியூரப்பா மீண்டும் முதல்வராக்கப்படுவார் என்று ஏற்கெனவே பாஜக தலைவர் நிதின் கட்காரி உறுதியளித்திருந்தார். இதனால் தமக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்றும் எடியூரப்பாவும் அவரது ஆதரவாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் எடியூரப்பாவும் கோர்ட் உத்தரவு நகலை கத்காரிக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளார். அதில் தான் நிரபராதி என்று கோர்ட் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.
இதற்கிடையே, எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரை முற்றுகையிட்டு வருகின்றனர். மேலும் டெல்லி சென்று பாஜக தலைமையுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். எடியூரப்பா விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையே, முதல்வர் சதானந்த கவுடா, தன் ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், எடியூரப்பாவுக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்குவது குறித்து, நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. இது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவெடுக்க வேண்டும். சமீபத்தில் நிதின் கட்காரி பெங்களூரு வந்திருந்த போது, மாநில அரசு தலைமை (முதல்வர் பதவி) மாற்றம் குறித்து யாரும் ஆலோசனை செய்ய வேண்டாம் என்று தெளிவாகக் கூறி விட்டு சென்றுள்ளார். இவ்விஷயத்தில் கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ, அதன்படி செயல்படுவோம் என்றார்.
ஹூப்ளியில் வெடிக்குமா பிரளயம்?
இந்த நிலையில் ஹூப்ளி நகரில் 11ம் தேதி எடியூரப்பா ஆதரவாளர்கள் ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அது உண்மையில் தனது பலத்தைக் காட்ட எடியூரப்பாவே ஏற்பாடு செய்துள்ள விழா என்கிறார்கள்.
அந்த நிகழ்ச்சியில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களைத் திரட்டிக் கொண்டு வந்து நிறுத்தப் போகிறார் எடியூரப்பா என்றும் பேசப்படுகிறது.
மீண்டும் எடியூரப்பாவின் நாடகம் தொடங்கி விட்டது. பாஜக தலைமை இந்த நாடகத்தை எப்படி சமாளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications