வாக்குப்பதிவு நிலவரம் 2 மணி் நேரத்திற்கு ஒரு முறை எஸ்.எம்.எஸ்.: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு உத்தரவு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து 2 மணி நேரத்திற்கு ஒரு முறை எஸ்.எம்.எஸ். அனுப்ப வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 242 வாக்குச்சாவடிகள் 24 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 1,160 பணியாளர்களுக்கு நெல்லை வண்ணார்பேட்டை எப்எக்ஸ் பொறியியல் கல்லூரியில் நேற்று 2ம் கட்ட பயிற்சி நடந்தது.
அப்போது தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது,
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு அந்தந்த வாக்குச்சாவடியில் ஆஜராக வேண்டும். மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் சரி பார்த்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவிற்கு முன்னதாக மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும். காலை 8 மணிக்கு வாக்குப்பதிவைத் துவங்கி சரியாக மாலை 5 மணிக்கு முடிக்க வேண்டும். வாக்குப்பதிவு தொடங்கிய விபரம் மற்றும் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை (காலை 9, 11 மணி, பிப்ற்பகல் 1,3,5) வாக்குப் பதிவு நிலவரம் குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
5 மணிக்கு வாக்குச்சாவடிகளில் இருக்கும் அனைவருக்கும் டோக்கன் வழங்கி விட்டு வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். 5 மணிக்கு பிறகு யாரையும் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரத்தை சுவிட்ச் ஆப் செய்து சீல் வைக்க வேண்டும் என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications