ஆந்திராவில் தெலுங்கில் பேசிய மாணவியை தாக்கிய பள்ளி முதல்வர்
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் சக மாணவர்களுடன் தெலுங்கில் பேசிய 4ம் வகுப்பு மாணவியை தாக்கிய பள்ளி முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் என்.எஸ்.என். இங்கிலீஷ் மீடியம் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி வளாகத்திற்குள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று கடுமையான விதிமுறை பின்பற்றப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 6ம் தேதி 4ம் வகுப்பை சேர்ந்த மாணவி ஒருவர், சக மாணவர்களிடம் தெலுங்கில் பேசி உள்ளார். இது குறித்து அப்பள்ளியின் முதல்வர் என்எஸ்என் மூர்த்தி என்பவர் மாணவியை தனியே அழைத்து விசாரித்துள்ளார்.
அப்போது பள்ளியின் விதிமுறையை மீறி தெலுங்கில் பேசிய குற்றத்திற்காக மாணவியை முதல்வர் தாக்கி உள்ளார். இதில் மாணவியின் வலது கை மற்றும் முழங்கை பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த மாணவிக்கு அப்பகுதியில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து காயமடைந்த மாணவியின் பெற்றோர், போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து மாணவியை தாக்கிய பள்ளி முதல்வர் மீது வழக்கு (ஆபத்தான ஆயுதங்களை வைத்து தாக்குதல், காயப்படுத்துதல்) பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications