இலங்கையில் இறுதியுத்தம் நடந்த நந்திக்கடல் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு
Subscribe to Oneindia Tamil
முல்லைத்தீவு: இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்ற நந்திக்கடல் பிரதேசம் பொதுமக்களின் பார்வைக்காகவும் மீன்பிடித் தொழிலுக்காகவும் நேற்று திறந்துவிடப்பட்டுள்ளது.
நந்திக்கடலிலில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை கண்டெடுத்ததாக இலங்கை ராணுவம் கூறியிருந்தது.
இறுதிகட்ட யத்தம் உக்கிரமாக நடந்த நந்திக்கடலைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தாக கூறி 3 ஆண்டுகளாக யாரையும் இலங்கை படையினர் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது கண்ணிவெடிகள் முழுவதுமாக அகற்றப்பட்டு மீன்பிடித் தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நந்திக் கடலைச் சுற்றிய பிற பகுதிகளில் இன்னமும் கண்னிவெடிகள் அகற்றப்படாததால் பொதும்க்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கைப் படை எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications