கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன்

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத மின்வெட்டால் தொழில், விவசாயம், கல்வி, குடிநீர் விநியோகம், வீட்டுப்பணிகள் என்று அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை தொடர்ந்து ஆண்டு வரும் திமுக, அதிமுக அரசுகள் கடந்த 10 ஆண்டுகளில் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தியை திட்டமிடாததே இதற்கு காரணம்.
வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரத்தை அளிக்க முயற்சி எடுத்து கொண்ட திமுக, அதிமுக அரசுகள் தமிழக தொழில்களுக்கான மின் தேவை குறித்து கவலைப்படவில்லை. இதனால் தமிழகத்தில் கடும் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கோடைக்காலம் துவங்கிவிட்ட நிலையில் மின் தேவை மேலும் அதிகரிக்கும். எனவே இப்பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் அமைத்த நிபுணர் குழுக்கள் அறிக்கை அளித்துவிட்ட நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொண்டு வர மத்திய அரசின் மின்தொடர் பாதைகளை பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்கள் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய மானிய விலையில் டீசல் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்," என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications