இந்தியா-இத்தாலி இடையேயான பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட உதவ தயார்: ஐரோப்பிய ஒன்றியம்
கோபன்ஹெகன்: தமிழக மீனவர்களை படுகொலை செய்த விவகாரத்தில் இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு தீர்வு காண ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டென்மார்க்கின் ஹோபன்கெஹன் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார பொறுப்பாளர் காத்ரீன் ஆஸ்தன் கூறுகையில், இருநாட்டுக்கும் இடையேயான விவகாரத்தில் தீர்வு ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றார்.
இது தொடர்பாக இத்தாலி அரசாங்கத்துடன் ஏற்கெனவே பேசியிருப்பதாகவும் தங்களால் முடிந்தவரை உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் இருவரை கேரள கடற்பரப்பில் இத்தாலிய கப்பலில் இருந்த அந்நாட்டு கப்பல் படையினர் இருவர் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து நீண்ட போராட்டத்துக்கு பிறகு இத்தாலிய படையினரை கேரள போலீசார் கைது செய்தனர். அரசு விருந்தினர் மாளிகையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications