வருடா வருடம் இந்திய என்ஜிஓக்களுக்குப் பாய்ந்து வரும் ரூ. 10,000 கோடி நிதி!

கடந்த 2009-10ம் ஆண்டு இந்திய தொண்டு நிறுவனங்கள் பெற்ற வெளிநாட்டு நிதியுதவியை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22,000 தொண்டு நிறுவனங்கள் இந்த வெளிநாட்டு உதவியைப் பெற்றுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவை 3218 ஆகும் என்று அத்தகவல் தெரிவிக்கிறது.
தமிழக நிறுவனங்கள் மட்டும் கடந்த 2009-10ல் ரூ. 1663.31 கோடி நிதியைப் பெற்றுள்ளன. இந்த நிதி பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளது.
தற்போது கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதியை தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து 12 தொண்டு நிறுவனங்களை மத்திய அரசு தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது. இவற்றின் நிதிப் பரிமாற்றம், செலவு உள்ளிட்டவை குறித்து தீவிரமாக ஆய்வு நடந்து வருகிறது. இதில் நான்கு நிறுவனங்கள் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள தொண்டு நிறுவனங்கள்தான் அதிக அளவிலான நிதியைப் பெற்றுள்ளன. அதாவது ரூ. 1815.91 கோடியைப் பெற்றுள்ளன. அடுத்த இடம் தமிழகத்திற்கு. ஆந்திராவில் உள்ள நிறுவனங்கள் ரூ. 1324.87 கோடி நிதியைப் பெற்றுள்ளன.
இந்தியாவிலேயே அதிக அளவிலான நிதியைப் பெற்ற மாவட்டம் சென்னைதான். இந்த மாவட்டத்திற்கு மட்டும் ரூ. 871.60 கோடி அந்நிய நிதி வந்துள்ளது. அடுத்த இடம் பெங்களூருக்கு. அந்த மாவட்டம் ரூ. 702.43 கோடி நிதியைப் பெற்றுள்ளது. மும்பை 606.63 கோடியைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு அதிக நிதியை அளிக்கும் நாடாக அமெரிக்கா திகழ்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேர்ல்ட் விஷன் இந்தியா நிறுவனம்தான் கடந்த 2009-10ல் அதிக அளவிலான நிதியை வாங்கியுள்ளது. அதாவது ரூ. 208.94 கோடி நிதியை அது வாங்கியுள்ளது.
தாங்கள் பெற்ற நிதியில் பெரும்பாலானவற்றை, அதாவது ரூ. 1482.58 கோடியை நிறுவன செலவுகளுக்காகவே பெரும்பாலான நிறுவனங்கள் செலவிட்டுள்ளன. ரூ. 944.13 கோடியை ஊரக வளர்ச்சிக்காகவும், சிறார் நலனுக்காக ரூ. 742.42 கோடியையும் அவை செலவிட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications