தயா என்ஜீனியரிங் கல்லூரி... கலெக்டரிடம் அழகிரி வக்கீல் நேரில் விளக்கம்
மதுரை: தயா என்ஜினீயரிங் கல்லூரி விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வக்கீல் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையில் மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரி நீர்பாசன வாய்க்காலை அடைத்து கட்டப்பட்டுள்ளதாக அந்த பகுதி விவசாயிகள் சங்க தலைவர் ராமலிங்கம் புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேலும், இது தொடர்பாக மத்திய மந்திரி மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, அவரது மகன் துரை தயாநிதி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் மு.க.அழகிரி நேரில் ஆஜராகாமல் இரண்டு முறை வக்கீல் மூலம் விளக்கம் அளித்தார்.
இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக வக்கீல் ஜானிகி ராமுலு நேற்று கலெக்டர் முன்னிலையில் மு.க.அழகிரி சார்பில் ஆஜாரானார்.
அப்போது, இந்த வழக்கு சென்னை உயர் நீதி மன்ற கிளையில் நிலுவையில் உள்ளதால், இது சம்பந்தமாக விளக்கம் அளிக்க மேலும் 20 நாட்கள் அவகாசம் கேட்டார். இதற்கு விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால், இது தொடர்பாக விளக்கம் அளிக்க காலஅவகாசம் வழங்கியும், அடுத்தக்கட்ட விசாரணை குறித்து நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் மாவட்ட கலெக்டர் சகாயம் தெரிவித்தார்.
இந்த விசாரணையின் போது கலெக்டருடன் கூடுதல் துணை கலெக்டர் பட்டாபிராமன், நில அளவை துறை இயக்குனர் மனோகரன், குண்டாறு என்ஜினீயர் முத்தையா, உசிலம்பட்டி ஆர்டிஓ புகழேந்தி ஆகியோரும் உடனிருந்தனர்.
மு.க. அழகிரியின் குடும்ப கல்லூரி விசாரணை என்பதால் கலெக்டர் அலுவலகத்தை சுற்றி திமுக முக்கிய பிரபலங்கள் குவிந்திருந்தனர். அதே போல பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications