சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு ரூ. 5000 வரை அள்ளித் தர 'பலே' திட்டம்!
சங்கரன்கோவில்: ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களின் விலை உயர்ந்து கொண்டே போக ஆரம்பித்துள்ளது. திருமங்கலம் தேர்தலில் ஆயிரம் என்ற அளவில் இருந்த ஒரு ஓட்டின் விலை இன்று ரூ. 5000 வரை உயர்ந்துள்ளதாம். சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு தலைக்கு ரூ. 5000 வரை கொடுக்க பலே திட்டத்தை தீட்டியுள்ளனவாம் முக்கியக் கட்சிகள். குறிப்பாக அதிமுகவும், திமுகவும்தான் இதில் மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மின் தடை, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றால் ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகள் பல முனை போட்டியால் சிதறும் நிலையில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள ஒவ்வொரு கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில் ஒரு பிரதான கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நடத்திய ரகசிய கூட்டத்தில் முதற்கட்டமாக வாக்காளர்களுக்கு 1000 ரூபாய் வழங்கவும், தேர்தலுக்கு முந்தைய நாள் வரை படிப்படியாக 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஆயிரம் ரூபாய் கட்டுகளை சுற்றுலா பஸ்கள், முக்கிய விஜபிக்கள் கார் மூலமும் கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பணப் பட்டுவாடாவை கச்சிதமாக முடிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். மேலும் எந்தவிதமான பிரச்சினையும் வந்து விடாமல் இறுக்கமான முறையில் இதைச் செய்யுமாறும் எச்சரிக்கை கலந்து உத்தரவிட்டுள்ளார்களாம்.
வாழ்க சனநாயகம்...!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications