இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் திமுக முழக்கம்
டெல்லி: ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமாக இன்று நடந்தது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அவரது உரை தொடங்குவதற்கு முன்பு திமுக உறுப்பினர்கள் எழுந்து இலங்கையின் போர்க்குற்றத்தைக் கண்டித்து கோஷமிட்டனர். மேலும், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், இலங்கையின் போர்க்குற்றத்தைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதை இந்தியா ஆதரிக்க வேண்டும். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் உரையில் இடம் பெற வேண்டும் என்று கோரி திமுக எம்.பிக்கள் கோஷமிட்டனர்.
திமுக உறுப்பினர்களின் திடீர் முழக்கத்தால் கூட்டுக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திமுக உறுப்பினர்கள் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். அதைத் தொடர்ந்து பிரதீபா பாட்டீல் தனது உரையைத் தொடங்கினார்.
திமுக உறுப்பினர்கள் கோஷமிட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் எழுந்து ஆதரவு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications