ஒட்டன்சத்திரத்தில் கொடுமை..டீ குடிக்கச் சென்ற 6 பேர் லாரி மோதி பலி!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பகுதியில் டீ குடிக்கச் சென்ற 6 பேர் மீது லாரி மோதியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் ரோட்டில் உள்ளது கல்லிமலை. இங்குள்ள பெருமாள் கோவில்வலசு பகுதியைச் சேர்ந்த 6 பேர் காலையில் டீ குடிக்க கடைக்குச் சென்றனர்.
அவர்கள் டீக்கடை அருகே நின்று டீ குடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி யாரும் எதிர்பாராவிதமாக டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் அந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications