முருகானந்தம் கொலை வழக்கு: இன்று ராமதாஸிடம் சிபிஐ விசாரணை
Subscribe to Oneindia Tamil

அதிமுக நிர்வாகியும், அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உறவினருமான முருகானந்தம் கடந்த 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது படுகொலை செய்யபப்ட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் ராமதாஸ், அன்புமணி ஆகிய 2 பேரின் பெயர்களும் இந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டன.
இதை எதிர்த்து சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸிடம் சிபிஐ விசாரித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சிபிஐ தகவல்கள் எதுவும் அதை உறுதிபடுத்தவில்லை. ஆனால் இன்று அவரிடம் சிபிஐ விசாரிக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications