கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க மத்திய அரசுக்கு மாநில அரசு உதவ வேண்டும்: ஜி.கே. வாசன் கோரிக்கை
கடலூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் மறைந்த காங்கிரஸ் தலைவர் இளையபெருமாளின் சிலையை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
தலித் மக்களுக்காக போராடும் ஒரே இயக்கம் காங்கிரஸ் கட்சி தான். நாடு சுதந்திரம் அடைந்தபோது தமிழகத்தில் காங்கிரஸ் அமைச்சர்கள் 17 பேரில் இருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதே போல காமராஜர் ஆட்சியில் கக்கன், பரமேஸ்வரன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர்.
இளையபெருமாள், மரகதம் சந்திரசேகரன் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தனர். தலித் சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்தார். தற்போதுள்ள லோக்சபா சபாநாயகர் மீராகுமார் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரே. தலித் மக்களுக்காக வன்கொடுமை தடுப்பு சட்டம், வேலைவாய்ப்பு, மக்கள் பிரதிநிதிகளில் இட ஒதுக்கீடு, ஆதி திராவிடர் நலத்திற்காக தேசிய ஆணையத்தை அமைத்தது காங்கிரஸ் கட்சி தான்.
தமிழகத்தில் குறைந்தபட்சம் 24 மணி நேரத்தில் 14 மணி நேரம் மின்சாரம் இல்லாத சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சிக்கு தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications