நாடாளுமன்ற கூட்டத் தொடர்-பங்கேற்க கனிமொழிக்கு நீதிமன்றம் அனுமதி

Subscribe to Oneindia Tamil

Kanimozhi
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க திமுக எம்.பி. கனிமொழிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ராஜ்யசபா எம்பியாக உள்ளதால், தன்னை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டுமென்று கோரி சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை சிபிஐ எதிர்க்கவில்லை.

இதையடுத்து இந்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, கனிமொழி பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி சார்பில் அவரது வழக்கறிஞர் நீதிமன்ற விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

ராசாவுக்கு அனுமதி கிடைக்குமா?:

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கடந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவில்லை. அதன்பின் நடைபெற்ற எந்த தொடர்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

ஒரு எம்பி நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் கலந்து கொள்ளவில்லை என்றால், அதற்கு சபாநாயகரிடம் அனுமதி வாங்க வேண்டும். வழக்கு விசாரணையில் கலந்து கொள்ளும் ராசா, தன்னால் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள இயலாதது தொடர்பாக, சபாநாயகர் மீரா குமாருக்கு மனு அனுப்பவிருந்தார்

அந்த மனுவை சிபிஐ நீதிமன்ற நீதிபதியின் ஒப்புதலுக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவிற்குப் பதிலளித்த நீதிபதி, நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்ப உள்ள மனுவுக்கு திகார் சிறையின் கண்காணிப்பாளரிடம் தான் ராசா ஒப்புதல் வாங்க வேண்டும். அந்த மனுவுக்கு ஒப்புதல் அளிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.

தற்போது நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ராசா கலந்து கொள்ள வேண்டும் என்றால், அவர் இந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். அவரது மனுவை ஏற்று, காவலர்கள் பாதுகாப்புடன் நாடாளுமன்றம் செல்ல ராசாவுக்கு அனுமதி வழங்கப்படும் என்றார்.

ஆனால், ராசா நாடாளுமன்றத்துக்கு வந்தார் எதிர்க் கட்சிகள் பிரச்சனை கிளப்பலாம் என்பதால், அவர் நாடாளுமன்றம் வர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+