சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Anna Library
சென்னை: கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை முறையாக தொடர்ந்து பராமரிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம்மாற்றம் செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.

இந்த வழக்கில் கடந்த 8-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது அரசின் முடிவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்த மனுதாரர்களில் ஒருவரான சென்னையை சேர்ந்த இளையபராதி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில். அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் எதையும் குறைக்கக் கூடாது என்று கடந்த ஜனவரி 19-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் நூலக செயல்பாடுகளை முடக்கும் விதத்தில், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த பல வசதிகளை அரசு குறைத்து வருகிறது. ஆகவே, இது பற்றி ஆராய்ந்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் விதத்தில் உயர்

நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இது பற்றி தமிழக அரசு தனது பதிலை தெரிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

இளையபாரதி மனு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற தலைமை ‌‌நீ‌திப‌தி இ‌க்பா‌ல், ‌‌‌நீ‌திப‌தி ‌சிவஞானம‌் அம‌ர்வு மு‌‌ன்‌னிலை‌யி‌ல் ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. விசாரணையின் முடிவில், ‌அ‌ண்ணா நூ‌ற்றா‌ண்டு நூலக‌த்தை முறையாக பராம‌ரி‌க்க த‌மிழக அரசு‌க்கு ‌நீ‌திப‌திக‌ள் உ‌‌த்தர‌வி‌ட்டதோடு, வழ‌க்கு ‌விசாரணையை ஏ‌ப்ர‌ல் 17‌‌ந் தே‌தி‌க்கு ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+