பிரச்சாரத்தில் ஒடசல் கொடுத்த மாஜி நிர்வாகி: உதவியாளருக்கு டோஸ் விட்ட விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி ஒருவர் சங்கரன்கோவில் பிரசாரத்தில் கூச்சல் போட்டதால் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் டென்ஷன் ஆனார்.

தேமுதிக வேட்பாளர் முத்துகுமாருக்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரண்டாவது நாளாக மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். தர்மத்தூரணி கிராமத்துக்கு வந்தபோது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் விஜயகாந்த் பேசத் தொடங்கினார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கட்சியின் முன்னாள் செயலாளர் பரமன் தன் கோஷ்டியினருடன் நின்று கொண்டு விஜயகாந்தை பேசவிடாமல் தனக்கு ஏன் பொறுப்பு வழங்கவில்லை என்று விடாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் பிரச்சாரம் முடிந்து பேசிக் கொள்ளலாம், அமைதியாக இருங்கள் என்று கூறினார். ஆனாலும் பரமனும், அவரது கோஷ்டியினரும் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதைக் கண்ட அவர் டென்ஷன் ஆனார். உடனே அவரது உதவியாளர் பார்த்தசாரதி விஜயகாந்திடம் விரைவில் பேச்சை முடியுங்கள், அடுத்த இடத்திற்கு சென்றுவிடுவோம் என்று கூறவே மேலும் ஆத்திரமடைந்த அவர் தனது உதவியாளருக்கு செம டோஸ் வி்ட்டார். இதனால் சில நிமிடங்களிலேயே பேச்சை முடித்துக் கொண்டு அடுத்த இடத்திற்கு புறப்பட்டு சென்றார். எந்த முடிவும் தெரிவிக்காமல் சென்றதால் பரமன் கோஷ்டியினர் அங்கிருந்த டிஜிட்டல் பேனரை கிழித்து சேதப்படுத்திவிட்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+