'லாட்டரி' மார்ட்டின் நண்பர்கள் வீடுகளில் கட்டுகட்டாக ரூ.7.70 கோடி பணம் பறிமுதல்!

லாட்டரி சீட்டுகளை பதுக்கி விற்பனை செய்தது, மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி கோவை சிறையில் உள்ளார் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின். அவரது நண்பர் தொழில் அதிபர் நாகராஜன். சென்னை ஆதம்பாக்கம் தில்லை சங்கர்நகர் 25வது தெருவில் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டின் கீழ்தளத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைததுள்ளார்.
இந்நிலையில் நாகராஜனின் வீட்டில் சட்டவிரோத பொருட்களும், லாட்டரி சீட்டுகளும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 2 மணிக்கு நாகராஜனின் கடையில் சோதனை நடத்தியபோது ரூ.7 கோடி பணம் கட்டுகட்டாக சிக்கியது. அதை போலீசார் பறிமுதல் செய்து நாகராஜனை விசாரித்தபோது அவர் ஒழுங்காக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் கூறியதாவது, கடந்த 1981ம் ஆண்டு முதல் பல்வேறு லாட்டரி நிறுவனங்களில் பணி புரிந்தேன். தற்போதும் லாட்டரி தொழில் செய்து வருகிறேன். லாட்டரி சீட்டுகளை ஹைதராபாத் மற்றும் டெல்லியில் இருந்து சிக்கிம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பேன். அவ்வாறு அனுப்பும்போது ஒரு சில கட்டுகள் இங்கு வரும். அவற்றை தமிழகத்தில் உள்ள நபர்களுக்கு வினியோகம் செய்வேன். 1984ல் இருந்து என்னுடன் வேலை பார்த்த கும்பகோணத்தைச் சேர்ந்த மூர்த்திக்கும் இந்த தொழி்லில் பங்குண்டு. இந்த பணத்தில் லாட்டரி தொழிலில் கிடைத்த ரூ. 2 கோடியும் அடக்கம். மூர்த்தி தான் சம்பாதித்த பணத்தை என்னிடம் கொடுத்து வைத்துள்ளார் என்றார்.
இதையடுத்து போலீசார் அண்ணா நகரில் உள்ள மூர்த்தி வீட்டுக்கு சென்று சோதனை நடத்தி ரூ.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
நாகராஜன் மற்றும் மூர்த்தி வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.7.50 கோடியில் மார்ட்டினுக்கு பெரும் பங்கு உண்டு என்று போலீசார் கருதுகின்றனர். கோவை சிறையில் உள்ள மார்ட்டினை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே மூர்த்தி தலைமறைவாகிவிட்டார். மூர்த்தி சிக்கினால் இந்த விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications