சங்கரன்கோவிலில் ஜெயிச்சாலும் ஒன்னும் பிரயோஜனம் கிடையாது: விஜயாக்ந்த்

திருவேங்கடத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயகாந்த் பேசியதாவது:
என் கல்யாண மண்டபத்தைக் கட்டித்தர, சட்டப்பேரவையில் நான் கோரிக்கை வைக்கவில்லை. மக்கள் பிரச்னையை பேசினேன், அவர்களுக்குப் பிடிக்கவில்லை. சங்கரன்கோவிலில் போட்டியிட சவால் விட்டனர். எனது, 29 எம்.எல்.ஏ.,க்களையும் பதவி விலகச்செய்கிறேன். 234 தொகுதியிலும் போட்டியிடத் தயாரா? தமிழகத்தில் கொள்ளை போவது தான், அ.தி.மு.க., அரசின் கொள்கை முடிவாக உள்ளது.
சங்கரன்கோவிலில் வெற்றி பெறுவதால், எங்களுக்கு எந்த பயனும் இல்லை. அ.தி.மு.க., தோற்றால், தமிழகத்தில் விலைவாசி குறையும். என்னை, திட்டுவதற்குத் தான், ஜெயலலிதா பிரசாரத்திற்கு வருகிறார். மக்களுக்கு பயன் இருக்காது. நீங்கள் எங்களைப் பேசுங்க; நாங்க உங்களைப் பேசுவோம், அது வேற விஷயம். தேவையில்லாமல், என் தொண்டர்களைச் சீண்டாதீர்கள் என்றார் அவர்.
சிவகாசியில் டேரா
சங்கரன் கோவில் இடைத்தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. கட்சித் தலைவர்கள் களம் இறங்கியுள்ளனர். இங்கு தங்குவதகு அறைகள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதாலும், போதிய வசதிகள் இல்லாததாலும் வெளியே தங்கி பிரசாரம் செய்கின்றனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா ஆகியோர் ,சிவகாசியில் உள்ள பெல் ஓட்டலில் தங்கி, தினமும் சங்கரன் கோவில் சென்று பிரசாரம் செய்கின்றனர். இரவு 12 மணிக்கு ஓட்டல் வரும் விஜயகாந்த் பகல் முழுவதும் ஓய்வு எடுக்கிறார்.
மாலை 3 மணிக்கு பிரசாரத்திற்கு செல்கிறார். இதற்காக நாளை (மார்ச்16) வரை ஓட்டலில் அறை புக்கிங் செய்யப்பட்டுள்ளது. பகலில் யாரையும் சந்திப்பது இல்லை. மேலும், இதே ஓட்டலில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி உட்பட சில கட்சி நிர்வாகிகளும் தங்கியுள்ளார். அ.தி.மு.க.,வினர் இரவில் தங்கி, காலை 9 மணிக்கு பிரசாரத்திற்கு சென்று விடுகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications