மமதா அறிவித்த கூடுதல் சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு முதல் அமல்
சென்னை: மமதா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்தபோது அறிவிக்கப்பட்ட சென்னை புறநகர் ரயில் சேவைகள் நீட்டிப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.
கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய ரயில்கள் இதுவரை இயக்கப்படவில்லை. இதற்கிடையில் 2012-13-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழ் நாட்டிற்கு 12 புதிய ரயில்களை விடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டது.
இதையடுத்து காட்பாடி- சேலம் மின்சார ரயில் 18-ந்தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான தொடக்க விழா காட்பாடியில் நடக்கிறது.
இதேபோல சென்னை புறநகர் பகுதிகளுக்கு 6 மின்சார ரயில்கள் அறிவித்தும் விடாமல் நிலுவையில் இருந்தது. இந்த ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் விடப்படுகிறது.
இதற்கான தொடக்க விழா சென்னை மூர்மார்க்கெட்டில் நடைபெறுகிறது.
புதிதாக விடப்படும் மின்சார ரெயில்கள்:
1. ஆவடி- சென்னை கடற்கரை.
2. சென்னை கடற்கரை- ஆவடி
3. சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி
4. கும்மிடிப்பூண்டி- சென்னை கடற்கரை
5. சென்னை மூர்மார்க் கெட்- திருவள்ளூர்
6. திருவள்ளூர் - சென்னை மூர்மார்க்கெட்.
மின்சார ரெயில்கள் புறப்படும் நேரம், வந்துசேரும் நேரம் பின்னர் அறிவிக்கப்படுகிறது. புதிய மின்சார ரெயில்கள் விடப்படுவதன் மூலம் காலை மற்றும் மாலையில் கூட்ட நெரிசல் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications