பர்னாலா மகன் நிறுவனம், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு மின்னணு பொருட்களை வழங்குவதில் நடந்த மோசடி தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன், தமிழக முன்னாள் ஆளுநர் பர்னாலாவின் மகனுக்கு சொந்தமான பர்னாஸ் நிறுவனம் உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு கடந்த 2007 மற்றும் 2010 வரை எலக்ட்ரானிக் பொருட்கள் கொள்முதல் செய்ததில் மோசடி நடந்ததாக புகார்கள் கூறப்பட்டன. முன்னாள் ஆளுநர் பர்னாலாவின் மகனுக்கு சொந்தமான பர்னாஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு வசதியாக சில நிறுவனங்களின் பெயரில் போலி விலைப் புள்ளிகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் சில அதிகாரிகளும், பர்னாஸ் இன்டர் நேஷனல் நிறுவனமும் சேர்ந்து தயாரித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையால் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.

இந்த குற்றச்சாட் டுக்களுக்கு முகாந்தரம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 120(பி), 467, 461 மற்றும் 420 ஆகியவற்றின் கீழும், லஞ்ச தடுப்புச்சட்டம் 13(2), 13(1)(டி), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பர்னாலா மகன் நிறுவனம்

இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். கிண்டி, கோட்டூர்புரம், திருவான்மியூர் உட்பட 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. வேப்பேரியில் உள்ள பர்னாஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண் டார்கள்.

இந்த நிறுவனத்தில் தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் மகன் ஜஸ்சித் சிங் பர்னாலா முக்கிய பங்குதாரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் பிரமுகர் எம்.நிஜாமுதீன் மற்றொரு பங்குதாரராக இருக்கிறார். அவருடைய வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

ஆவடியில் உள்ள பர்னாஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மேனேஜர் ஆர்.யஷ்வந்தகுமார் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.திருவான்மியூரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் வீட்டில் சோதனை நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழக தனிப்பிரிவு அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் பி.நாராயண சாமி, இத்துறையின் உதவியாளர் கே.நாகராஜன் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.இன்றைய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+