ஸ்ப்கெட்ரம் அலைவரிசை ஊழல்: விசாரணைக்கு சிறப்பு பெஞ்ச் அமைத்தது சுப்ரீம் கோர்ட்

உலுக்கிய ஊழல்
நாட்டை உலுக்கிய ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து உச்சநீதிமன்றத்திலும் சி.பி.ஐ. தனிநீதிமன்றத்திலும் பலவேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அதில் ஒரு வழக்கில், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த காலத்தில் வழங்கப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
நீதிபதிகள் ஏ.கே.கங்குலி, ஜி.எஸ்.சிங்வி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த பரபரப்பான தீர்ப்பை கூறி இருந்தது. இந்த தீர்ப்புக்குப்பின், நீதிபதி கங்குலி பதவி ஓய்வு பெற்று விட்டார். இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி சி.பி.ஐ. தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சு.சாமி மனுமீது விசாரணை
சி.பி.ஐ தனிநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி சிங்வி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்காக, உச்சநீடிமன்ற தலைமை நீதிபதி கபாடியா சிறப்பு பெஞ்ச் ஒன்றை அமைத்து இருக்கும் தகவலை நீதிபதி சிங்வி வெளியிட்டார்.
இந்த பெஞ்சில், சிங்வியுடன் நீதிபதி ஏ.கே.பட்நாயக்கும் இடம்பெற்று இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ப.சிதம்பரத்துக்கு எதிரான சுப்பிரமணியசாமியின் மேல்முறையீட்டு வழக்கை இந்த தனி பெஞ்ச் விசாரிப்பதற்கான தகுந்த உத்தரவுகளை தலைமை நீதிபதியிடம் இருந்து பெற்றுக்கொள்ளும்படி, உச்சநீதிமன்ற பதிவாளருக்கும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.
122 லைசென்சுகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த தீர்ப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு, மத்திய அரசு, பொது நல வழக்கு மையங்கள் மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால், அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிப்பதற்காக இந்த சிறப்பு அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்து உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications