ராஜபக்சேவை தூக்கிடக்கோரி கோயம்பேடு வியாபாரிகள் ஸ்ட்ரைக் - மொட்டையடித்து ஆர்ப்பாட்டம்!
சென்னை: இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா முழுமையாக ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், சர்வதேச குற்றவாளி கூண்டில் ராஜபக்சேவை நிறுத்தி தூக்கிலிட கோரியும் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
கோயம்பேடு மார்க்கெட்டின் முதலாம் நுழைவாயிலில் பிரமாண்ட பந்தல் அமைத்து காலை 9.45 மணிக்கு அவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். உண்ணாவிரதத்துக்கு பழ வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
காய்கறி அங்காடி சங்க தலைவர் ஜி.வி.ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மலர் அங்காடி சங்க தலைவர் அருள் விசுவாசம் போராட்டத்தை விளக்கிப் பேசினார்.
உண்ணாவிரதத்தை திரைப்பட இயக்குனர் கவுதம் தொடங்கி வைத்தார். நாம் தமிழர் கட்சி தலைவர் இயக்குனர் சீமான், தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உள்பட பலர் சிறப்புரையாற்றினார்கள்.
உண்ணாவிரதத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் எல்.பி.ராஜேந்திரன், வைகுண்டம், முத்துராமன் உள்பட 700-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கு பொருளாதார தடைவிதிக்க வேண்டும், ராஜபக்சேவை தூக்கிலிட வேண்டும், இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தின்மீது இந்திய நிபந்தனையின்றி வாக்களிக்க வேண்டும் போன்ற கோஷங்களை அவர்கள் முழங்கினார்கள்.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழம், மலர் என 4 ஆயிரம் கடைகள் உள்ளது. அனைத்து கடைகளும் இன்று மூடப்பட்டு இருந்தது. வியாபாரிகள் போராட்டம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் வரவில்லை.
மொட்டை
உண்ணாவிரதத்தில் பங்கேற்ற பலரும் தங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டனர். ஈழ சகோதரர்களின் துன்பத்தில் பங்கேற்கும் வகையில் தாங்கள் மொட்டையடித்துக் கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications